< Back
சினிமா செய்திகள்
Parari movie release date announced
சினிமா செய்திகள்

'பராரி' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தினத்தந்தி
|
6 Nov 2024 10:35 AM IST

'பராரி' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் நடிப்பில் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பராரி' . 'குக்கூ', 'ஜோக்கர்', 'ஜிப்ஸி', 'ஜப்பான்' போன்ற பல படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன், எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை வழங்குகிறார். இப்படத்தின் இயக்குனர் எழில் பெரியவேடி ராஜு முருகனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஷேன் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை காலா பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் நடிகர் ஹரி சங்கர் தயாரித்திருக்கிறார். சமீபத்தில், 'பராரி' திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரில் ஆதிக்க சாதி - ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோரின் வாழ்வியலின் உணர்வுபூர்வமான காட்சிகள் இடம்பெற்றிருந்ததால் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்தநிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்