அருகில் மதுவுடன்...ரசிகர்களுக்கு ஓவியா கூறிய அறிவுரை
|நடிகை ஓவியாவுக்கு பிக்பாஸுக்கு பிறகு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
சென்னை,
களவாணி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஓவியா. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்த படங்களும் சரியாக ஹிட்டாகவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு படம் மட்டும் நன்றாக ஓடியது. ஆனால் அந்தப் படத்தில் ஓவியா பெரிதாக கவனத்தை ஈர்க்கவில்லை.
அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவிலிருந்து ஒதுங்கிய அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டு தமிழ்நாடு முழுக்க பேமஸ் ஆனார். அவருக்கென்று சமூக வலைதளங்களில் ஆர்மியும் உருவாக்கப்பட்டது. ஆனாலும் பிக்பாஸுக்கு பிறகும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் மது அருந்தும் புகைப்படத்தைப் பகிர்ந்து, "குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது" எனக் குறிப்பிட்டுள்ளார். என்னதான் தைரியமான நடிகையாக இருந்தாலும் ஓபனாக இப்படியா..? என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.