தனுஷின் பிறந்த நாளையொட்டி 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட படக்குழு
|தனுஷ் இயக்கி நடித்துள்ள 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தனுஷ் தனது 50-வது திரைப்படமான 'ராயன்' படத்தை இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரககாஷ் ராஜ், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமாமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றன.
தணிக்கைக்குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ள 'ராயன்' படம் நேற்று முந்தினம் தியேட்டர்களில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நேற்று முன்தினம் சென்னையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல்லாக ஓடியது.
நடிகர் தனுஷுக்கு இன்று பிறந்த நாள். அதனையொட்டி சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தனுஷ் இயக்கி, நடித்த 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் இயக்குனர் தனுஷ் படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு நடிப்பு சொல்லி தரும் விதம் அனைவரையும் கவரும் படி இருந்தது. அதனுடன், எங்கள் இயக்குனருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்றும் பதிவிட்டுள்ளனர்.