< Back
சினிமா செய்திகள்
பிரபல பாடகர் பிரபாகர் கரேக்கர் காலமானார்
சினிமா செய்திகள்

பிரபல பாடகர் பிரபாகர் கரேக்கர் காலமானார்

தினத்தந்தி
|
13 Feb 2025 11:45 AM IST

பிரபல பாடகர் பிரபாகர் கரேக்கர் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.

மும்பை,

புகழ்பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் பண்டிட் பிரபாகர் கரேக்கர் உடல்நல குறைவால் இன்று காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 80. மும்பை சிவாஜி பார்க் பகுதியில் உள்ள அவரது வீட்டில் நேற்று இரவு காலமானார் என்று அவரது கும்பத்தினர் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

கோவாவில் பிறந்த கரேக்கர், போலவ விதல் பஹவ விதல் மற்றும் வக்ரதுண்ட் மகாகே போன்ற பாடல்களுக்கு பெயர் பெற்றவராவார். அவர் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் தரப்படுத்தப்பட்ட கலைஞராக இருந்தவர். கரேக்கர் பண்டிட் சுரேஷ் ஹல்டங்கர், பண்டிட் ஜிதேந்திர அபிஷேகி மற்றும் பண்டிட் சி.ஆர். வியாஸ் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர். தான்சேன் சம்மான், சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் கோமந்த் விபூஷன் விருது உட்பட பல கவுரவ விருதுகளை இவர் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்