ஷாருக்கான், சல்மான் கான் இல்லை...இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர் யார் தெரியுமா?
|இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
மும்பை,
இந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகர்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில், இதற்கு முன்பு முதலிடத்தில் இருந்த நடிகர் விஜய், தற்போது 2-ம் இடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் ஷாருக்கான் இருக்கிறார். அதேபோல், இவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி நடிகர் பிரபாஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படத்தின் மிகப்பெரிய வெற்றி இதற்கு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த பட்டியலில் 4-வது இடத்தில் ஜூனியர் என்.டி.ஆர், 5-வது இடத்தில் அஜித் ஆகியோர் உள்ளனர். 6,7,8, 9 மற்றும் 10 ஆகிய இடங்களில் முறையே அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, சூர்யா, ராம் சரண் மற்றும் சல்மான் கான் உள்ளனர்.
இதனையடுத்து, பிரபாஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். 'கல்கி 2898 ஏடி' படத்திற்கு பிறகு பிரபாஸ், சலார் 2, தி ராஜா சாப், ஸ்பிரிட் மற்றும் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக உள்ளார்.