புஷ்பா 2 இல்லை...இந்த படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் ஷ்ரத்தா கபூர்?
|'ஸ்ட்ரீ 2' படத்தில் ரசிகர்களை கவர்ந்த ஷ்ரத்தா கபூருக்கு புஷ்பா 2: தி ரூல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
சென்னை,
தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான 'சாஹோ' படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் 'ஆஷிக் 2, ஹைதர், ராக் ஆன்-2, ஓகே ஜானு' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார்.
சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த 'ஸ்ட்ரீ 2' படத்தில் நடித்து மிகவும் பிரபலமான இவருக்கு புஷ்பா 2: தி ரூல் படத்தில் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைய ஸ்ரீலீலா அந்த வாய்ப்பை ஏற்த்தார்.
புஷ்பா 2: தி ரூல் படத்தை ஷ்ரத்தா கபூர் தவறவிட்டிருந்தாலும், ஹிரித்திக் ரோஷன், ஜுனியர் என்.டி.ஆர் நடிக்கும் வார் 2-ல் ஒரு சிறப்பு பாடலுக்கு நடனமாட வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ள்து. இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
அயன் முகர்ஜி இயக்கும் வார் 2 படம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று வெளியாக உள்ளது. இதில், ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார், அதே சமயம் ஜுனியர் என்டிஆர் வில்லனாக நடிக்கிறார். ஷ்ரத்தா கபூர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை என்றாலும், 2 நட்சத்திரங்களுடன் இணைய இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.