மமிதா இல்லை...இந்த நடிகைக்கு ஜோடியாக நடிக்க விரும்பும் நஸ்லென்
|‘பிரேமலு’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக நஸ்லென் கூறினார்.
திருவனந்தபுரம்,
மலையாள படங்களில் நடித்து வருபவர் நஸ்லென். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'தண்ணீர் மாத்தன் தினங்கள்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதில் இவரது நடிப்பு ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தது.
அதனைத்தொடர்ந்து இவர் நடித்திருந்த பிரேமலு படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. கிரிஷ் ஏ.டி இயக்கிய இந்தப் படம் மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக உருவெடுத்தது. இதில், மமிதா பைஜு கதாநாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நஸ்லென், அனஸ்வராவுக்கு ஜோடியாக நடிக்க விரும்புவதாக கூறினார்.
இது குறித்து அவர் கூறுகையில், நானும் மமிதாவும் நல்ல நண்பர்கள். 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். அனஸ்வராவுடன் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற விரும்புகிறேன். நாங்கள் இதற்கு முன்பு ஒன்றாக நடித்திருந்தாலும், அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை' என்றார்.
நஸ்லென் தற்போது இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் 'ஐ அம் காதலன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் 7-ம் தேதி வெளியாகவுள்ளது. சைபர் கிரைம் கதைக்களத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நஸ்லென் ஒரு ஹேக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.