< Back
சினிமா செய்திகள்
Not Dhruv Vikram or Jiiva, THIS actor to play the lead role in Dada director Ganesh K Babus next
சினிமா செய்திகள்

துருவ் விக்ரமோ ஜீவாவோ இல்லை, 'டாடா' பட இயக்குனரின் அடுத்த படத்தில் இவர்தான் நடிகர்?

தினத்தந்தி
|
13 July 2024 8:12 AM IST

இயக்குனர் கணேஷ் கே பாபு தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சென்னை,

கவில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'டாடா' படம் மூலம் அறிமுகமானார் கணேஷ் கே பாபு. அபர்ணா தாஸ் கதாநாயகியாக நடித்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து, இயக்குனர் கணேஷ் கே பாபு தனது அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. சமீபத்தில் இப்படத்தில், துருவ் விக்ரம் அல்லது ஜீவா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், துருவ் விக்ரமோ அல்லது ஜீவாவோ இல்லை நடிகர் ஜெயம் ரவிதான் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது நடிகர் ஜெயம் ரவி, 'ஜீனி', 'காதலிக்க நேரமில்லை' மற்றும் 'பிரதர்' ஆகிய படங்களில் பிசியாக உள்ளார். மேலும், இவர் 'தனி ஒருவன் 2' படத்திலும் நடிக்க இருப்பதாக தெரிவித்திருந்தார். இப்படத்தை தொடங்க நேரம் எடுக்கும் என்பதால் இதற்கு முன்பு 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபுவின் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்