சென்னை, ஐதராபாத் இல்லை...- லண்டனில் தனுஷை காண திரண்ட ரசிகர்கள்
|லண்டன் சென்றுள்ள தனுஷை காண ரசிகர்கள் திரண்டனர்.
லண்டன்,
தனுஷ் தமிழ் மட்டுமில்லாமல், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கு இதனால், உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில், தற்போது ரசிகர்கள் தனுஷை காண திரண்டிருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் , சென்னையிலோ அல்லது ஐதராபாத்திலோ நடக்கவில்லை. லண்டனில் நடந்துள்ளது. அதன்படி, லண்டனில் நடந்த ஒரு உணவக வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பங்கேற்க சென்றிருக்கிறார். அப்போது அவரை காண அப்பகுதியில் ரசிகர்கள் திரண்டனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் தற்போது 'இட்லி கடை' படத்தை இயக்கி நடித்து வருகிறார். இது இவர் இயக்கும் 4-வது படமாகும். நித்யா மேனன் கதாநாயகியாக நடிக்கும் இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாக உள்ளது. இது மட்டுமில்லாமல், தனுஷ் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படத்தையும் இயக்கி வருகிறார்.
மறுபுறம் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் 'குபேரா' படத்திலும் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரும் காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.