< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
கதாநாயகனாக இல்லை...இயக்குனராக அறிமுகமாகும் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்
|20 Nov 2024 10:30 AM IST
ஆர்யன் கான், சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவார் என எதிர்பார்த்திருந்தநிலையில், இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான். இவர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாவார் என எதிர்பார்த்திருந்தநிலையில், தற்போது இயக்குனராக அறிமுகமாக உள்ளதாக அறிவித்துள்ளார்.
அதன்படி, நெட்பிலிக்ஸ்-ல் வெளியாகவுள்ள ஒரு வெப்தொடரை ஆர்யன் கான் எழுதி இயக்குகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த வெப் தொடர், அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இந்த வெப் தொடரை ஷாருக்-கவுரி கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் நெட்பிளிக்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறது.
இதன் மூலம் ரெட் சில்லிஸ் - நெட்பிளிக்ஸ் உடன் 6-வது முறையாக இணைந்துள்ளது. இதற்கு முன்பாக டார்லிங்ஸ், பக்சக், கிளாஸ் ஆப் 83, பேட்டல், பார்ட் ஆப் பிளட் ஆகிய படங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளது.