< Back
சினிமா செய்திகள்
Not Allu Arjun, Rashmika Mandanna, Fahadh Faasil...Do you know who was originally supposed to star in the film Pushpa?
சினிமா செய்திகள்

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் இல்லை...'புஷ்பா' படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்களா?

தினத்தந்தி
|
5 Dec 2024 9:26 AM IST

புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

சென்னை,

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த திரைப்படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசைமைத்திருந்தார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க வில்லனாக நடிகர் பகத் பாசில் நடித்திருந்தார்.

இப்படத்தில் நடித்ததற்காக அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இப்படத்தின் மிகப்பெரிய வரவேற்பையடுத்து, தற்போது இதன் இரண்டாம் பாகமாக புஷ்பா 2 இன்று வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இவ்வாறு மிகப்பெரிய அளவில் உருவாகி வரவேற்பை பெற்றிருக்கும் புஷ்பா படத்தில் நடிக்க இயக்குனர் சுகுமார் முதலில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஆகியோரை அணுகவில்லை என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம். இப்படத்தில் அல்லு அர்ஜுனின் புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் மகேஷ் பாபுவை இயக்குனர் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆனால், அவர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பாததால் இயக்குனர் அல்லு அர்ஜுனை அணுகி இருக்கிறார்.

அதேபோல், ராஷ்மிகாவின் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்தில் முதலில் சமந்தா நடிக்க இருந்திருக்கிறார். ஆனால், 'ரங்கஸ்தலம்' படத்திற்குப் பிறகு கிராமப்புற பெண்ணாக நடிக்க சமந்தா விரும்பாததாக கூறப்படுகிறது. இதனால், ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார்.

மறுபுறம் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியை சுகுமார் அணுகி இருக்கிறார். ஆனால், அப்போது விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க விரும்பாததையடுத்து பகத் பாசிலை இயக்குனர் தேர்ந்தெடுத்ததாக தெரிகிறது.

மேலும் செய்திகள்