'வார்த்தைகள் இல்லை'...தந்தையான பின் அனுபவங்களை பகிர்ந்த ரன்வீர் சிங்
|மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட ரன்வீர் சிங், தந்தையான பின் அனுபவங்களை பற்றி பகிர்ந்தார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங். இவர் பிரபல நடிகை தீபிகா படுகோனை கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதனைத்தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 8-ம் தேதி இந்த ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு கடந்த 1-ம் தேதி 'துவா படுகோனே சிங்' என பெயரிட்டுள்ளதாக அறிவித்தனர். இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்துகொண்ட ரன்வீர் சிங், தந்தையான பின் அனுபவங்களை பற்றி பகிர்ந்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில்,
'உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என் மகள் துவா பிறந்த பின் நான் எல்லையற்ற மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். அது எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன், ஆனால், இந்த மகிழ்ச்சியை விவரிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. தற்போது தந்தையின் பணியைதான் அதிக நேரம் செய்கிறேன்' என்றார்.