விஜய் இல்லை...துப்பாக்கி படத்தில் நடிக்க ஏ.ஆர் முருகதாசின் முதல் தேர்வு யார் தெரியுமா?
|விஜய் நடிப்பில் வெளியாகி முதன்முறையாக ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்த படம் துப்பாக்கி.
சென்னை,
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன திரைப்படம் 'துப்பாக்கி'. விஜய்யின் கெரியரில் முக்கியமான படமாகவும் துப்பாக்கி அமைந்தது. விஜய் நடிப்பில் வெளியாகி முதன்முறையாக ரூ.100 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்த படம் இதுவாகும்.
இந்த படத்தில் காஜல் அகர்வால், சத்யன், வித்யுத் ஜம்வால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சுமார் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், மொத்தமாக ரூ. 129 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது.
இவ்வாறு மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தில் நடிக்க ஏ.ஆர் முருகதாஸ் முதலில் தேர்ந்தெடுத்தது விஜய் இல்லை, அக்சய் குமார். ஆம், இப்படத்தின் கதையை ஏ.ஆர் முருகதாஸ் முதலில் அக்சய் குமாரிடம்தான் கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
'அக்சய் குமாரிடம்தான் துப்பாக்கி படத்தின் கதையை முதலில் கூறினேன். அதற்கு அவர் சரி சொன்னார். பின்னர் அவர் அங்கு தொடர்ந்து படங்கள் நடித்து வந்ததால் துப்பாக்கி படம் தாமதமானது. அப்போது எனக்கு 7-ம் அறிவு இறுதிகட்டத்தில் இருந்தது.
அந்த சமயத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் சார் போன் செய்து, மணிரத்னம் சார் இயக்கத்தில் விஜய் நடிக்க இருந்தார். ஆனால், சில காரணத்தால் அது கைவிடப்பட்டது. உங்களிடம் கதை இருந்தால் விஜய்யை அழைக்கலாம் என்றார். உடனே நான் அக்சய் குமாருக்கு போன் செய்து, சார் படம் இப்படி தாமதமாகிறது. முதலில் நான் இதை தமிழில் எடுக்கிறேன் என்றேன்' என்றார்.