'யாரும் அந்த பாத்திரத்தில் நடிக்க மாட்டார்கள், ஆனால்...'-இளம் நடிகையை பாராட்டிய துல்கர் சல்மான்
|துல்கர் சல்மான் நடிப்பில் தீபாவளியன்று வெளியான படம் ’லக்கி பாஸ்கர்’.
சென்னை,
மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான 'சீதா ராமம்' படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது. இதில், மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தற்பொழுது துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று வெளியானது. இதில் நடிகை மீனாட்சி சவுத்ரி, சுமதி கதாபாத்திரத்தில் இவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பையும் வசூலை பெற்றுவரும்நிலையில், இளம் நடிகை மீனாட்சி சவுத்ரியை துல்கர் சல்மான் பாராட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'சுமதி வேடத்தில் நடிக்க எந்த இளம் நடிகையும் விருப்பம் தெரிவித்திருக்கமாட்டார்கள். ஆனால், அந்த கதாபாத்திரத்தில் மீனாட்சி மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். சுமதி கதாபாத்திரத்தில் அவரை பார்த்த முதல் நாளே, அந்த பாத்திரத்திற்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்று எங்களுக்கு தோன்றியது.
இப்போது, வேறு யாரையும் அந்த கதாபாத்திரத்தில் என்னால் கற்பனை கூட செய்துபார்க்க முடியவில்லை. இந்த பாத்திரம் அதிக நேரம் திரையில் வரக்கூடிய பெரிய பாத்திரம். அதை அவர் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்' என்றார்.