விருது வென்ற மகிழ்ச்சியை குடும்பத்துடன் பகிர்ந்த நித்யா மேனன்
|சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன் வென்றார்.
சென்னை,
ஆண்டுதோறும் இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் ஊக்குவிக்கும் விதமாக இந்திய திரை படைப்புகளுக்கு இந்திய அரசால் தேசிய விருது வழங்கப்படுகிறது. இதற்கு ஒவ்வொரு ஆண்டும் அரசால் நியமிக்கப்படும் தேசிய தேர்வுக்குழு இதனை தேர்ந்தெடுக்கிறது.
சமீபத்தில், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வென்ற திரைப்பட கலைஞர்களுக்கு தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்தார். அதில் சிறந்த நடிகைக்கான விருதை 'திருச்சிற்றம்பலம்' திரைப்படத்திற்காக நடிகை நித்யா மேனன் விருதை பெற்றார்.
விருது வாங்கிய மகிழ்ச்சியை அவரது பெற்றோருடன் பகிர்ந்துக் கொண்டார். அப்பொழுது நித்யா மேனன் தன் பெற்றொருடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படத்தை அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டார்.