'நிறங்கள் மூன்று' திரைப்படத்தின் "மேகம் போலாகி" வீடியோ பாடல் வெளியீடு
|கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை,
'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நிறங்கள் மூன்று'. இந்த படத்தில் நடிகர் அதர்வா முரளி, சரத்குமார், ரகுமான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹைப்பர்லிங்க் திரில்லர் கதையம்சம் கொண்ட திரைப்படமாக இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் கடந்த ஆண்டு வெளியானது. சில பிரச்சினைகள் காரணமாக 'நிறங்கள் மூன்று' திரைப்படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கிறது. ஏற்கனவே கார்த்திக் நரேன் இயக்கிய 'நரகாசூரன்' படம் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் வரும் நாளை வெளியாகவுள்ளது. படத்தில் அதர்வா வெற்றி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வெற்றி கதாப்பாத்திரத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் "மேகம் போலாகி" வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பாடலாசிரியை தாமரை எழுத, பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். ஜேக்ஸ் பிஜாயின் மயக்கும் இசையில் உருவாகியிருக்கும் இந்த பாடல் இணைய தலைமுறையினரைக் கவர்ந்திருக்கிறது.