சர்ச்சை பேச்சுக்கு விளக்கமளித்த நிகிலா விமல்
|சமீபத்தில், மாட்டிறைச்சி குறித்து நிகிலா விமல் பேசியிருந்தது சர்ச்சையானது.
சென்னை,
பிரபல மலையாள நடிகை நிகிலா விமல். இவர் மலையாளத்தைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு திரையுலகிலும் பணியாற்றி வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் குருவாயூர் அம்பலநடையில். 'ஜெய ஜெய ஜெய ஹே' படப்புகழ் விபின் தாஸ் இயக்கிய இப்படம் கடந்த மே மாதம் 16-ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இதில், பிருதிவிராஜ், பாசில் ஜோசப், நிகிலா விமல், அனஸ்வரா ராஜன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சமீபத்தில், மாட்டிறைச்சி குறித்து நிகிலா விமல் பேசியிருந்தது சர்ச்சையானது. இந்நிலையில், சர்ச்சை பேச்சுக்கு நிகிலா விமல் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
'நாம் சில கருத்துகளை கூறும் பொழுது, சிலர் அசிங்கமாக திட்டுவார்கள். சிலர் சரியாக பேசுகிறாள் என்பார்கள். இது போன்ற விஷயங்களில் நான் கூறிய கருத்திற்கு எதிராக கருத்து கூறுபவர்கள், அதற்கு பதில் கொடுக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், நான் அதை செய்ய மாட்டேன். அப்படி, நான் ஏதாவது கூறினால் அவர்கள் அதை பெரிதாக்கி விடுவார்கள். இப்படி இருக்கும்போது நம்மை திமிர் பிடித்தவர் என்று கூட சொல்வார்கள், என்றார்.