அடுத்த படம்...இந்த நடிகருக்கு ஜோடியாகிறாரா சாய்பல்லவி?
|சாய் பல்லவியின் அடுத்த படம் தொடர்பான முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
பிரேமம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் இவர் நடித்த 'மலர் டீச்சர்' கதாபாத்திரம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தது. முதல் படத்திலேயே இவருக்கு சிறந்த நடிகை என்று பெயர் கிடைத்ததை தொடர்ந்து தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன.
சமீபத்தில், சிவகார்த்திகேயனுடன் 'அமரன்' திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றார். தற்போது இவர் நாக சைதன்யாவுடன் 'தண்டேல்' படத்திலும், பாலிவுட்டில் 'ராமாயணம்' படத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சாய்பல்லவியின் அடுத்த படம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, பிரபல இயக்குனர் வேணு யெல்டாண்டி இயக்கும் 'எல்லம்மா' படத்தில் நடிகர் நித்தினுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.