< Back
சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் புதிய வெப் தொடர்!

17 Feb 2025 7:31 AM IST
இந்த வெப் தொடரில் மாதவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்பராஜ். இவர் தற்போது நடிகர் சூர்யாவை வைத்து 'ரெட்ரோ' படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில், இவர் ஸ்டேன் பெஞ்ச் நிறுவனத்தின் மூலம் புதிய வெப்தொடரை உருவாக்க உள்ளார்.
இந்த வெப் தொடரில் மாதவன் கதாநாயகனாக நடிக்க உள்ளார். மேலும் கவுதம் கார்த்திக் மற்றும் துல்கர் சல்மான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இந்த தொடரை 'அம்மு' படத்தினை இயக்கிய சாருகேஷ் சேகர் இயக்க உள்ளார்.
நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி.யில் இந்த வெப் தொடர் வெளியாக உள்ளது. இந்த தொடருக்கு 'லேகசி' எனத் தலைப்பிட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த தொடர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.