< Back
சினிமா செய்திகள்
துப்பறிவாளன் 2 படம் குறித்த புதிய அப்டேட்
சினிமா செய்திகள்

'துப்பறிவாளன் 2' படம் குறித்த புதிய அப்டேட்

தினத்தந்தி
|
21 Oct 2024 9:52 PM IST

துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிப்பதாக விஷால் அறிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து, கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பறிவாளன். துப்பறியும் கதைக்களத்தில் உருவான இப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, துப்பறிவாளன் 2 படத்தை விஷாலை வைத்து மிஷ்கின் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

2019ம் ஆண்டு துப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தபோது, மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் கைவிடப்பட்டது. அதன் பிறகு, துப்பறிவாளன் 2 படத்தை தானே இயக்கி நடிப்பதாக விஷால் அறிவித்தார். ஆனால், அதன்பின் வேறு படங்களில் விஷால் பிஸியாக நடித்து வந்தார்.

இந்தநிலையில், துப்பறிவாளன் 2 திரைக்கதையில் சில மாற்றங்களை விஷால் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகிற டிசம்பர் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு லண்டன், மலேசியா, அஜர்பைஜன் போன்ற நகரங்களில் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்