< Back
சினிமா செய்திகள்
New update on Jayam Ravi and Nithya Menon starrer ‘Kadhalikka Neramillai’
சினிமா செய்திகள்

ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிக்கும் 'காதலிக்க நேரமில்லை' படத்தின் புதிய அப்டேட்

தினத்தந்தி
|
19 Nov 2024 8:38 AM IST

'காதலிக்க நேரமில்லை' படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது.

சென்னை,

பிரதர் படத்தை தொடர்ந்து ஜெயம்ரவி நடிப்பில் வெளியாக உள்ள படம் 'காதலிக்க நேரமில்லை'. இதில், நித்யா மேனன், யோகி பாபு, லால், வினய், லட்சுமி கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். "வணக்கம் சென்னை" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கிருத்திகா உதயநிதி இப்படத்தை இயக்கி உள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இத்திரைப்படம் அடுத்த மாதம் 20-ந் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், 'காதலிக்க நேரமில்லை' படக்குழு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய அப்டேட் விரைவில் வெளியாக உள்ளது என்று படக்குழு தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்