'பாட்டல் ராதா' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
|'பாட்டல் ராதா' படத்தினை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
சென்னை,
இயக்குனர் பா.ரஞ்சித் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'. இந்த படத்தை பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ரூபேஷ் ஷாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டராக இந்த படம் இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகின. இதற்கிடையில், இப்படம் வருகிற 20-ந் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி வெளியாகும் என் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.