< Back
சினிமா செய்திகள்
பாபி சிம்ஹா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

பாபி சிம்ஹா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
6 Nov 2024 3:22 PM IST

நடிகர் பாபி சிம்ஹாவின் பிறந்த நாளை முன்னிட்டு 'நான் வயலன்ஸ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் பாபி சிம்ஹா, கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'பீட்சா' மற்றும் 'காதலில் சொதப்புவது' எப்படி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து 'சூது கவ்வும், ஜிகர்தண்டா, இந்தியன் 2' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர். குறிப்பாக 'ஜிகர்தண்டா' படத்தில் இவரின் நடிப்புக்கு தேசிய விருது கிடைத்தது.

'மெட்ரோ' மற்றும் 'கோடியில் ஒருவன்' போன்ற படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் "நான் வயலன்ஸ்" என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, அதிதி பாலன், மெட்ரோ சிரிஷ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்கின்றனர். ஏகே பிக்சர்ஸ் சார்பில் லேகா தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். 90-களில் நடக்கும் கதையான இது, மதுரை பின்னணியில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், நடிகர் பாபி சிம்ஹா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் படக்குழுவினர் 'நான் வயலன்ஸ்' படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்