< Back
சினிமா செய்திகள்
New poster of Rishabh Shettys Chhatrapati Shivaji Maharaj goes viral
சினிமா செய்திகள்

ரிஷப் ஷெட்டி நடிக்கும் 'சத்ரபதி சிவாஜி மஹராஜ்' படத்தின் புதிய போஸ்டர் - வைரல்

தினத்தந்தி
|
19 Feb 2025 5:08 PM IST

இப்படம் வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

சென்னை,

கன்னட சினிமாவில் பிரபல இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ரிஷப் ஷெட்டி. இவர் 'காந்தாரா' என்ற திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து 'காந்தாரா 2' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

இதனிடையே இவர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் 'ஜெய் அனுமான்' படத்திலும் சந்தீப் சிங் இயக்கத்தில் "சத்ரபதி சிவாஜி மஹராஜ்" என்ற படத்தில் நடித்து வருகிறார். மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் உருவாகிறது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது.

இந்த நிலையில், சத்ரபதி சிவாஜியின் 395-வது பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படம் வருகிற 2027-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்