< Back
சினிமா செய்திகள்
ராகவா லாரன்ஸ் பிறந்தநாளையொட்டி புல்லட் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் பிறந்தநாளையொட்டி 'புல்லட்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

தினத்தந்தி
|
29 Oct 2024 2:31 PM IST

இன்னசி பாண்டியன் இயக்கிய ‘புல்லட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

சென்னை,

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் இயக்கி நடித்த காஞ்சனா சீரிஸ் படங்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இதனிடையே திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூக சேவையிலும் ராகவா லாரன்ஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' . இப்படத்தில் லாரன்ஸுடன் இணைந்து எஸ்.ஜே சூர்யா, நிமிஷா சஜயன் மற்றும் சஞ்சனா நட்ராஜன் நடித்திருந்தனர். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இது லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 2 -வது படமாகும். அதனையடுத்து வெங்கட் மோகன் இயக்கத்தில் 'ஹண்டர்', அறிமுக இயக்குனரான துரை செந்தில் குமார் இயக்கத்தில் 'அதிகாரம்' போன்ற படங்களில் நடிக்க இருக்கிறார். மேலும், 'காஞ்சனா 4' பட பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

இன்று நடிகர் ராகவாலாரன்ஸ் தனது 47-வது பிறந்தநாளை கொண்டாடும்நிலையில், 'புல்லட்' படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தை இன்னசி பாண்டியன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான டைரி திரைப்படத்தை இயக்கியவராவார். இந்த படத்தை பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் தம்பியான எல்வின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வைஷாலி ராஜ் படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளனர்.

மேலும் செய்திகள்