< Back
சினிமா செய்திகள்
அஜித்தின் 64-வது படம் குறித்த புதிய தகவல்!
சினிமா செய்திகள்

அஜித்தின் 64-வது படம் குறித்த புதிய தகவல்!

தினத்தந்தி
|
20 Feb 2025 1:58 PM IST

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அஜித்தின் 63-வது படம் 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் கடந்த 6-ந் தேதி வெளியான படம் 'விடாமுயற்சி'. மகிழ் திருமேனி இயக்கிய இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தனது 63-வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்டோர் நடித்துள்ளர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கிடையில் அஜித்தின் அடுத்த படமான 64-வது படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் கிடைத்தது. இந்த நிலையில், அஜித்தின் 64-வது படம் தொடர்பான கிடைத்த புதிய தகவல் என்னவென்றால், இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தொடர்பான அறிப்புகள் குட் பேட் அக்லி படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்