< Back
சினிமா செய்திகள்
மஞ்சள் வீரன் படத்தில் புதிய கதாநாயகன் ?
சினிமா செய்திகள்

'மஞ்சள் வீரன்' படத்தில் புதிய கதாநாயகன் ?

தினத்தந்தி
|
10 Nov 2024 8:03 AM IST

செல்அம் இயக்கும் 'மஞ்சள் வீரன்' படத்தின் கதாநாயகனாக முதலில் டிடிஎப் வாசன் நடிக்க இருந்தார்.

சென்னை,

பைக்கில் பயணம் செய்து அதனை யூடியூபில் வீடியோவாக போட்டு பிரபலமானவர் டிடிஎப் வாசன். இவர் பிரபலமானதை தொடர்ந்து இயக்குனர் செல்அம் இயக்கத்தில் 'மஞ்சள் வீரன்' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். இவர் ஏற்கனவே 'திருவிக பூங்கா' என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்றமும் வெளியாகி வைரலானது.

பின்னர் 'மஞ்சள் வீரன்' படத்தில் இருந்து படத்தின் கதாநாயகனும் , பிரபல யூடியூபருமான டிடிஎப் வாசன் நீக்கப்பட்டார். படத்திற்கு அவர் ஒத்துழைப்பு தரவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளதாக செல்அம் தெரிவித்து இருந்தார். பின்னர் 'மஞ்சள் வீரன்' படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ் இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிப்பார் என்ற தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் செல்அம் மஞ்சள் வீரன் படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது படத்திற்காக படப்பிடிப்பு தளங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதி படத்தின் கதாநாயகனை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்து இருந்தான். ஆனால் அன்று அறிமுகப்படுத்த முடியவில்லை என்றார்.

ஆனால் வருகிற நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகன் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக இயக்குனர் செல்அம் தெரிவித்துள்ளார். எதையும் தாங்கும் மன வலிமை கொண்ட மாவீரனை தான் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்