ஐஸ்வர்யா லட்சுமி நடித்த 'ஹலோ மம்மி' படத்தின் 'நீயோ' பாடல் வெளியானது
|கடந்த மாதம் 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது.
சென்னை,
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாள சினிமாவில் நுழைந்து பல படங்களில் நடித்து இருந்தாலும் தமிழிலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் 'ஜகமே தந்திரம்', விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி', மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.
இவர் தற்பொழுது 'ஹலோ மம்மி' என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான வைஷக் இளன்ஸ் இயக்கி உள்ளார். ஷரப் உதீன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அஜு வர்கீஸ், ஜெகதீஷ், ஜானி ஆண்டனி, பிந்து பேனிக்கர், சன்னி இந்துஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த மாதம் 21-ந் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும்நிலையில், இப்படத்தின் 'நீயோ' என்ற பாடல் தற்போது வெளியாகி உள்ளது.