அப்படி ஆடைகளை அணிய சொன்ன கணவர்...விவாகரத்துக்கான அதிர்ச்சி காரணங்களை கூறிய நடிகை
|நடிகை நீலம் கோத்தாரி தனது முதல் திருமணம் குறித்து உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்.
மும்பை,
பிரபல பாலிவுட் நடிகை நீலம் கோத்தாரி. ஹாங்காங்கில் பிறந்த இவர், மும்பை வந்து பின்னர் சினிமாவில் நுழைந்தார். இவர் கடந்த 2000ம் ஆண்டு லண்டனைச் சேர்ந்த ரிஷி சேத்தியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதனைத்தொடர்ந்து, கடந்த 2011ம் ஆண்டு சமீர் சோனி என்பவரை நீலம் கோத்தாரி திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து அஹானா என்ற பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். தற்போது 54 வயதாகும் இவர் வெப் தொடர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நீலம் கோத்தாரி தனது முதல் திருமணம் குறித்து பல கருத்துகளை உணர்வுப்பூர்வமாக பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்,'ரிஷி சேத்தியா என்னிடம் இந்திய பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும், அசைவ உணவுகளையும், மதுப் பழக்கத்தையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று கூறினார். அது அனைத்திற்கும் சம்மதித்தேன்.
எனக்கு அடையாளத்தை கொடுத்த பெயரையும் மாற்ற கூறினார். அதையும் மாற்றினேன். நான் சூப்பர் மார்க்கெட் அல்லது வெளியில் எங்காவது செல்லும்போது பலரும் என்னிடம் வந்து நீங்கள் நடிகை நீலமா என கேட்பார்கள். அவர்களிடம் இல்லை என பலமுறை கூறியிருக்கிறேன்.
ஒருநாள் என் மனதில் இப்படி என் அடையாளத்தை ஏன் மறைத்து வாழ வேண்டும், இதனால் யாருக்கு என்ன பயன் என தொடர்ந்து பல கேள்விகள் எழுந்தன. அதனால், நான் ரிஷி சேத்தியாவை விவாகரத்து செய்து பிரிந்து விட்டேன். இதன்பின்தான், சமீர் சோனி என்பவரை காதலித்து 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன்' என்றார்.