< Back
சினிமா செய்திகள்
NBK 109: Music composer Thaman gives teaser update
சினிமா செய்திகள்

'என்.பி.கே 109': டீசர் அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் தமன்

தினத்தந்தி
|
11 Nov 2024 7:11 PM IST

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 109-வது படத்தை பாபி கொல்லி இயக்குகிறார்.

சென்னை,

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்பொழுது அவரது 109-வது படத்தில் நடிக்கிறார்.

தற்காலிகமாக 'என்.பி.கே 109' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பிரபல இயக்குனரான பாபி கொல்லி இயக்குகிறார். எஸ் தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

சூர்யதேவர நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இதில், பாபி தியோல், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஊர்வசி ரவுத்தேலா மற்றும் சாந்தினி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அப்டேட்டை படத்தின் இசையமைப்பாளர் தமன் கொடுத்துள்ளார். அதன்படி, டீசர் பணிகள் முடிவடைந்துவிட்டதாகவும் , விரைவில் டீசர் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தமன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகள்