< Back
சினிமா செய்திகள்
நயன்தாராவிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்ட விவகாரம் :  நயன்தாரா தரப்பு விளக்கம்
சினிமா செய்திகள்

நயன்தாராவிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்ட விவகாரம் : நயன்தாரா தரப்பு விளக்கம்

தினத்தந்தி
|
6 Jan 2025 9:47 PM IST

நயன்தாராவின் ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்திற்காக படக்குழு நஷ்டஈடு கேட்டதாக தகவல் வெளியாகின.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. கடந்த நவம்பர் மாதம் 18-ந் தேதி நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் 'நயன்தாரா: பியாண்ட் தி பேரி டேல்' ஆவணப்படம் வெளியானது. இந்த ஆவணப்படத்தில் அவருடைய திருமண வீடியோ மற்றும் சிறுவயது வாழ்க்கை முதல், முன்னணி கதாநாயகியாக உயர்ந்தது வரை உள்ள சம்பவங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.

இந்த ஆவணப்படத்தில், நடிகர் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடித்த 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை உரிய அனுமதியின்றி நயன்தாராவிற்கு எதிராக தனுஷ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில்அதே ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, நடிகை நயன்தாராவிடம் ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் என சந்திரமுகி படக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இதற்கு சந்திரமுகி பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித புகாரும் அளிக்கவில்லை, நோட்டீஸும் அனுப்பவில்லை என்று தெரிவித்துள்ளது. சந்திரமுகி படத்தின் காட்சிகளை பயன்படுத்தி கொள்ள தயாரிப்பு நிறுவனம் என்ஓசி கொடுத்துள்ளதாக நயன்தாரா தரப்பினர் விளக்கமளித்துள்ளனர்.

மேலும் செய்திகள்