< Back
சினிமா செய்திகள்
நயன்தாராவின் டியர் ஸ்டூடண்ட்ஸ் படப்பிடிப்பு நிறைவு!
சினிமா செய்திகள்

நயன்தாராவின் "டியர் ஸ்டூடண்ட்ஸ்" படப்பிடிப்பு நிறைவு!

தினத்தந்தி
|
23 March 2025 6:02 PM IST

இரண்டாவது முறையாக நயன்தாரா நிவின் பாலியுடன் இணைந்து நடித்துள்ளார்.

சென்னை,

பிரபல நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் ஜோடியாக ஜவான் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.1,100 கோடிக்கும் மேல் இப்படம் வசூலித்தது.

நயன்தாரா மீண்டும் நிவின் பாலியுடன் இணைந்து'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே கடந்த 2019-ம் ஆண்டு 'லவ் ஆக்சன் டிராமா' என்ற திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நயன்தாரா நடித்திருந்த நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இரண்டாவது முறையாக நிவின் பாலியுடன் நயன்தாரா இணைந்துள்ளார். இந்த படத்தை ஜார்ஜ் பிலிப்ஸ் ராய் மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் இயக்குகின்றனர். இந்த படத்தில் நயன்தாரா ஆசிரியராக நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் தீப்தி, சுபத்ரா ராபர்ட் மற்றும் கிரண் கொண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. படக்குழு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு நிறைவு வீடியோ பதிவை பகிர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்