படப்பிடிப்பின்போது பெயரை சொல்லி அழைத்த சிறுவன்...சைகையில் பேசிய நயன்தாரா - வீடியோ வைரல்
|மலையாளத்தில் நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்தில் நயன்தாரா நடித்து வருகிறார்.
சென்னை,
'ஐயா' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நயன்தாரா தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாக திரைத்துறையில் இருக்கிறார். தமிழ் திரையுலகில் பெண் சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவர், ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்த ஜவான் படத்தில் நடித்து இந்தி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானார்.
தற்போது, யாஷ் நடிக்கும் 'டாக்சிக்' படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலியுடன் 'டியர் ஸ்டூடண்ட்ஸ்' படத்திலும் நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில், டியர் ஸ்டூடண்ட்ஸ் படப்பிடிப்பின்போது நடிகை நயன்தாரா, சிறிய வயது ரசிகர் ஒருவருடன் சைகையில் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
அந்த வீடியோவில், நயன்தாரா இரவு நேர படப்பிடிப்பில் ஈடுபட்டார். அப்போது சிறுவன் ஒருவன் நயன்தாராவின் பெயரை சத்தமாக கத்துகிறான். இதனை பார்த்த நயன்தாரா சைகையில், சாப்பிட்டாயா, போய் தூங்கு என்று கூறுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.