< Back
சினிமா செய்திகள்
நயன்தாரா ஆவணப்பட வழக்கு - இறுதி விசாரணை ஒத்திவைப்பு
சினிமா செய்திகள்

நயன்தாரா ஆவணப்பட வழக்கு - இறுதி விசாரணை ஒத்திவைப்பு

தினத்தந்தி
|
8 Jan 2025 2:11 PM IST

நடிகை நயன்தாரா மீது நடிகர் தனுஷ் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை

நெட்பிளிக்சில் வெளியான நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப் படத்தில், நடிகர் தனுஷ் தயாரித்த 'நானும் ரவுடிதான்' படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, அதை பயன்படுத்த தடை விதிக்க கோரியும், ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும் தனுஷ் சார்பில் வொண்டர் பார் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நெட்பிளிக்ஸ் தரப்பில் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து இனி கால அவகாசம் கேட்கக் கூடாது என்று கூறிய நீதிபதி, வழக்கின் இறுதி விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


மேலும் செய்திகள்