< Back
சினிமா செய்திகள்
Nanis Hit 3 assistant cinematographer K.R. Krishna passed away
சினிமா செய்திகள்

நானியின் 'ஹிட் 3' பட உதவி ஒளிப்பதிவாளர் கே.ஆர். கிருஷ்ணா காலமானார்

தினத்தந்தி
|
31 Dec 2024 1:06 PM IST

நானி நடித்து வரும் ஹிட் 3 படத்தில் கே.ஆர். கிருஷ்ணா உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

சென்னை,

இளம் ஒளிப்பதிவாளர் கே.ஆர். கிருஷ்ணா( 30). தனது 20 வயதிலேயே ஒளிப்பதிவு பயின்ற இவர் , தீபக் பரம்போல், அபர்ணா தாஸ் நடித்த 'மனோஹரம்' படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். தற்போது நானி நடித்து வரும் ஹிட் 3 படத்தில் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.

ராஜஸ்தான் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ஜம்மு காஷ்மீரில் நடந்து வருகிறது. கடந்த 23-ம் தேதி இப்படப்பிடிப்பின்போது கே.ஆர். கிருஷ்ணாக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து, ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், நேற்று அவர் உயிரிழந்தார். இன்று மாலை அவரது சொந்த ஊரான கேரளாவின் பெரும்பாவூருக்கு விமானம் மூலம் உடல் கொண்டுவரப்பட்டு நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்