ராஜமவுலி, சந்தீப் ரெட்டி வங்கா படங்களில் நடிக்க விரும்பும் நந்தமுரி பாலகிருஷ்ணா
|தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா.
சென்னை,
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நந்தமுரி பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் நடித்திருந்தார். 2021-ம் ஆண்டு அதிக வசூல் செய்த தெலுங்குப் படங்களில் ஒன்றாக அமைந்தது.
தற்போது, இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இது மட்டுமில்லாமல் தனது 109-வது படமான டாக்கு மகாராஜ் படத்திலும் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்து வருகிறார். இப்படம் அடுத்த மாதம் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது.
மறுபுறம், நந்தமுரி பாலகிருஷ்ணா என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார். அதில், பிரபல இயக்குனர்களான ராஜமவுலி மற்றும் சந்தீப் ரெட்டி வங்கா ஆகியோரின் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்,
'ஒரு வேளை வாய்ப்பு கிடைத்தால், ராஜமவுலி படத்தில் ஹீரோவாகவும், சந்தீப் ரெட்டி வாங்காவின் இயக்கத்தில் வில்லனாகவும் நடிக்க விரும்புகிறேன்' என்றார்