'ஆவேஷம்' படத்தின் தெலுங்கு ரீமேக் - பாலகிருஷ்ணா மறுப்பு
|பகத் பாசில் நடிப்பில் வெளியான 'ஆவேஷம்' தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை,
பகத் பாசில் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி ஹிட் அடித்த ஆவேஷம் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளதாகவும் அதில், நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பதாகவும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது.
இந்நிலையில், நடிகர் பாலகிருஷ்ணா இப்படத்தில் நடிக்க தான் கையெழுத்திடவில்லை என கூறி தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் மற்ற தெலுங்கு நடிகர் யாரிடமும் இப்படத்தில் நடிப்பது குறித்து யாரும் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.
தற்போது , நடிகர் பாலகிருஷ்ணா என்பிகே 109, பிபி4 ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜித்து மாதவன் இயக்கத்தில் மலையாளத்தில் உருவான 'ஆவேஷம்' திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.150 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக உள்ளது. இத்திரைப்படத்தில் பஹத் பாசில், பூஜா மோகன்ராஜ், சஜின் கோபு உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படம் தற்போது ஓ.டி.டி தளங்களில் பல்வேறு மொழிகளில் வெளியாகி உள்ளது.