< Back
சினிமா செய்திகள்
நான் ஏன் கோபப்பட வேண்டும்? - நடிகையின் பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த நடிகர்
சினிமா செய்திகள்

'நான் ஏன் கோபப்பட வேண்டும்?' - நடிகையின் பாலியல் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த நடிகர்

தினத்தந்தி
|
23 Jun 2024 10:11 AM IST

தமிழ் சினிமாவில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை தனுஸ்ரீ தத்தா.

மும்பை,

பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு என பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் மூலம் அறிமுகமானார். முன்னதாக தத்தா ஒரு பேட்டியில், நடிகர் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான படம் 'ஹார்ன் ஓகே பிளீஸ்'. இந்த படத்தில் நடிகர் நானா படேகர் நடித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நானா படேகர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார் தத்தா. இதனை தொடர்ந்து மறுத்து வருகிறார் நானா படேகர்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் இதனை மீண்டும் மறுத்துள்ளார். இது கூறித்து அவர் கூறுகையில், "அதெல்லாம் பொய் என்று எனக்கு தெரியும், அதனால் கோபப்படவில்லை, எல்லாம் பொய்யாக இருக்கும்போது, நான் ஏன் கோபப்பட வேண்டும்?. அவை நடந்திருந்தால் பேசலாம். அப்படி எதுவும் நடக்காதபோது நான் என்ன சொல்ல முடியும்? அனைவருக்கும் உண்மை தெரியும்.' என்றார்.

மேலும் செய்திகள்