பொங்கல் போட்டியில் இணைந்த 'நாகபந்தம்' திரைப்படம்
|'நாகபந்தம்' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி வெளியாக உள்ளது.
சென்னை,
'கூத்தாச்சாரி' மற்றும் 'டெவில்: தி பிரிட்டிஷ் சீக்ரெட் ஏஜென்ட்' போன்ற பிளாக்பஸ்டர் படங்களைத் தயாரித்தவர் அபிஷேக் நாமா. தற்போது இவர் சினிமா அனுபவத்தை மாற்றி அமைக்கும் ஒரு அற்புதமான படத்தைத் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு 'நாகபந்தம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. அபிஷேக் நாமா இப்படத்தை ஆன்மிகம் மற்றும் சாகசங்கள் நிறைந்த ஒரு அற்புதமான திரைக்கதையாக உருவாக்கியுள்ளார்.
கேஜிஎப் படத்தின் புகழ் பெற்ற அவினாஷ் இந்த படத்தில் அகோரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதியுள்ள இப்படத்திற்கு அபே இசையமைத்துள்ளார். நாகபந்தம் ஒரு பான் இந்தியா திரைப்படமாகும். இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது.
அதன்படி இப்படம் வருகிற 13-ந் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. பொங்கல் பண்டிகையில் நிறைய படங்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளியாக உள்ளன. ஆனால் மயாஜாலம், மர்மம் மற்றும் சாகசம் என உருவாகியுள்ள இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.