நாக சைதன்யா-சோபிதா துலிபாலா தம்பதி...ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம்
|நாக சைதன்யா-சோபிதா துலிபாலா தம்பதிக்கு கடந்த 4-ந் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து, பின்னர் கடந்த 2021-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன்பிறகு இரண்டு வருடங்களாக காதலித்து வந்த சோபிதா துலிபாலாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இவர்களது திருமணம் கடந்த 4-ந் தேதி ஐதாராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் மணமக்களை வாழ்த்தினர். அதன்பின்னர், நாக சைதன்யா மற்றும் சோபிதா திருமண புகைப்படங்களை நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இந்த நிலையில், நேற்று புதுமண தம்பதிகள் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் மல்லண்ணா கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். புதுமண தம்பதிகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.