< Back
சினிமா செய்திகள்
நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண சடங்குகள் துவக்கம்
சினிமா செய்திகள்

நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமண சடங்குகள் துவக்கம்

தினத்தந்தி
|
21 Oct 2024 6:04 PM IST

கடந்த ஆகஸ்ட் மாதம் நாக சைதன்யாவுக்கு நடிகை சோபிதா துலிபாலாவுடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

சென்னை,

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தெலுங்கில் 'ஏ மாயா சேசாவே, மனம், லவ் ஸ்டோரி, மஜிலி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு பிரிவதாக அறிவித்து விவாகரத்து பெற்றுகொண்டனர்.

அதன் பிறகு நடிகர் நாக சைதன்யா நடிகை சோபிதா துலிபாலாவை காதலிப்பதாக தகவல் பரவியநிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ந் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இது குறித்தான புகைப்படங்களை நடிகர் நாகார்ஜுனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதை தொடர்ந்து இவர்களின் திருமணம் எப்போது நடக்கும் என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்தது. இந்தநிலையில், நடிகை சோபிதா துலிபாலா இன்று தன் வீட்டில் திருமணத்திற்கான சடங்குகள் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் இவர்களின் திருமணம் நடக்க உள்ளது உறுதியாகி உள்ளது.

தமிழில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சோபிதா துலிபாலா. மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.'மங்கி மேன்' என்ற இந்தி படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்