நான் இப்படித்தான் உயிரிழக்க வேண்டும்.. இதுதான் என் ஆசை - ஷாருக்கான்
|சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
மும்பை,
இந்தி பட உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ஷாருக்கான். இவருக்கு சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 77-வது லோகார்னோ திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படது. ஷாருக்கானுக்கு லோகார்னோ திரைப்பட விழாவில் பெருமை மிகு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விழாவில் பேசிய ஷாருக்கான், 'படப்பிடிப்பு தளத்திலேயே நான் உயிரிழக்க வேண்டும். அதுதான் என் வாழ்நாள் கனவு' என்றார். ஷாருக்கான் நடிப்பில் வெளியான பாசிகர், தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே உள்ளிட்ட படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. தி பாந்தன், டான் 2, ஓம் சாந்தி ஓம் படங்களின் வெற்றியால் அவரது ரசிகர்கள் அவரை 'கிங் கான்' என்று அழைத்தனர்.
2002-ல் வெளியான தேவதாஸ் அவருக்கு பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. ஷாருக்கான் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான், ஜவான் படங்களும் பெரிய வெற்றி பெற்றன. இரண்டு திரைப்படங்களும் 1,000 கோடி ரூபாய் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.