< Back
சினிமா செய்திகள்
என்னுடைய கனவு நனவானது - நடிகர் உபேந்திரா
சினிமா செய்திகள்

என்னுடைய கனவு நனவானது - நடிகர் உபேந்திரா

தினத்தந்தி
|
19 Dec 2024 10:53 AM IST

கன்னட நடிகர் உபேந்திரா ரஜினிகாந்தின் 'கூலி' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சென்னை,

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குனருமான உபேந்திரா இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம், 'யு.ஐ'. இப்படம் சயின்ஸ் பிக்சன் ஆக்சன் படமாக உருவாகி உள்ளது. இதில் ரேஷ்மா நானய்யா, சன்னி லியோன், சாது கோகிலா, ஜிஷு சென்குப்தா, முரளி சர்மா என பலர் நடித்துள்ளனர். கன்னடத்தில் உருவான இந்தப் படம், தமிழ், தெலுங்கிலும் வெளியாக உள்ளது. இப்படம் ரூ.100 கோடி ரூபாய் பட்ஜட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சமீபத்தில் இந்த படத்தின் புரமோசன் நிகழ்ச்சியின் போது, நடிகர் உபேந்திரா பேசியதாவது, "இது உளவியல், அரசியல் நையாண்டி படம். இது பார்வையாளர்களுக்கு புதிய அனுபவமாக இருக்கும். இதில் நாங்கள் புதிய உலகத்தை உருவாக்கி இருக்கிறோம். இது ஒரு சிறந்த படமாக உருவாகியுள்ளது.

மேலும் ரஜினிகாந்துடன் 'கூலி' படத்தில் நடித்து வருகிறேன். அவருடன் நடிப்பதால் என்னுடைய நீண்ட நாள் கனவு நனவானது. அவர் எனக்கு ஒரு துரோணாச்சாரியார் போன்றவர். அவரது பேச்சு நடிப்புக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் ஒரு உத்வேகமானவர். நான் என்னை ரஜினியின் சிஷ்யனாகவே கருதுகிறேன். அவருடன் இணைந்து நடித்தது அற்புதமான அனுபவம்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்