"காதலுக்கு கொடியிலே மல்லிகைப்பூ...'- இளையராஜாவின் பாடல்களை நினைவுகூர்ந்த யுவன்
|'நேசிப்பாயா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
சென்னை,
'குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல்' ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன், கடந்த 2007-ம் ஆண்டு இயக்கிய 'பில்லா' மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இவர் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்திற்கு 'நேசிப்பாயா' என்று பெரியடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் சரத்குமார், குஷ்பூ, பிரபு, ராஜா மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது யுவன் சங்கர் ராஜா பேசுகையில்,
'நேசிப்பாயா படத்திற்கு நாங்கள் எல்லோருமே எங்களுடைய சிறந்ததை கொடுத்திருக்கிறோம். இப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி' என்றார்.
யுவன் சங்கர் ராஜா, முன்பாக தனது தந்தை இளையராஜாவின் பாடல்களில் இருந்து சில பாடலை உருவாக்கியதாக தெரிவித்திருந்தார். இதனை மேற்கோள் காட்டிய தொகுப்பாளர், காதல் என்றால் இசைஞானியின் எந்த பாடலை எடுப்பீர்கள் என்று கேட்டார் அதற்கு யுவன், கொடியிலே மல்லிகைப்பூ என்றார். தொடர்ந்து, காதல் தோல்வி என கேட்க, அதற்கு யுவன் தளபதி படத்தில் வரும் சுந்தரி கண்ணால் ஒரு செய்தி என்ற பாடலை கூறி இளையராஜாவின் பாடல்களை நினைவுகூர்ந்தார்.