< Back
சினிமா செய்திகள்
உலகத் தரம் வாய்ந்த கனவை வெளிப்படுத்திய இசையமைப்பாளர் தமன்
சினிமா செய்திகள்

உலகத் தரம் வாய்ந்த கனவை வெளிப்படுத்திய இசையமைப்பாளர் தமன்

தினத்தந்தி
|
17 Nov 2024 11:10 AM IST

இசையமைப்பாளர் தமன் அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா தி ரூல்' படத்திற்கு பின்னணி இசையமைத்துள்ளார்.

சென்னை,

நட்சத்திர இசையமைப்பாளர் தமன் தமிழில் 'வாரிசு, பிரின்ஸ், எனிமி, ரசவாதி' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது "ஓஜி, தி ராஜா சாப், டாக்கு மகராஜ் மற்றும் கேம் சேஞ்சர்" உள்ளிட்ட படங்களில் பணியாற்றி வருகிறார். தமன் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

அப்போது பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தமன் தனது நீண்ட நாள் கனவு பற்றி மனம் திறந்து பேசினார். "உலகத் தரத்திலான இசைப் பள்ளியை உருவாக்க விரும்புகிறேன். மோசமான பொருளாதார நிலையில் உள்ள மாணவர்களுக்கு எனது பள்ளியில் இலவச கல்வி கிடைக்கும். இசை குற்ற விகிதத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இன்னும் 2-3 வருடங்களில் உலகத்தரம் வாய்ந்த மியூசிக் ஸ்டுடியோவை உருவாக்குவேன். எனது கனவை நனவாக்க அரசிடம் உதவி கேட்கிறேன், ஆனால் ஸ்டுடியோ அமைக்க நிலம் கேட்கமாட்டேன்" என்றார் தமன்.

அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமாரின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பான்-இந்தியா அதிரடி நாடகமான 'புஷ்பா தி ரூல்' படத்திற்கான பின்னணி இசையை தமன் சமீபத்தில் முடித்தார். தமன் இசையமைத்துள்ள பாலய்யாவின் டாக்கு மகராஜ் மற்றும் ராம் சரணின் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு பெரிய படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளன.

மேலும் செய்திகள்