< Back
சினிமா செய்திகள்
Mukund Varadarajan in this film before Amaran - viral video
சினிமா செய்திகள்

அமரனுக்கு முன்பே இந்த படத்தில் இடம்பெற்ற முகுந்த் வரதராஜன் - வைரல் வீடியோ

தினத்தந்தி
|
13 Nov 2024 9:06 PM IST

பிருத்விராஜ் படத்தில் இருந்து சிறிய வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

சென்னை,

மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிய 'அமரன்' படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில், சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த 2015-ம் ஆண்டு வெளியான 'பிக்கெட் 43' படத்தில் இருந்து ஒரு சிறிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதில் முகுந்த் வரதராஜனைப் பற்றிய ஒரு சிறிய உரையாடல் இடம்பெற்றிருக்கிறது.

அதுதான் அந்த வீடியோ வைரலாவதற்குக் காரணமாக அமைந்துள்ளது. மேஜர் ரவி இயக்கிய, 'பிக்கெட் 43' படத்தில் பிருத்விராஜ் சுகுமாரன், ஹவில்தார் ஹரி என்ற இந்திய ராணுவ வீரராக நடித்திருந்தார்.

மேலும் செய்திகள்