'லக்கி பாஸ்கர்' படத்தை பார்த்து மிருணாள் தாக்கூர் கொடுத்த விமர்சனம்!
|துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ’சீதாராமம்’ படத்தில் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சென்னை,
நடிகர் துல்கர் சல்மான் 'லக்கி பாஸ்கர்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளியன்று வெளியானது. இதில் நடிகை மீனாட்சி சவுத்ரி, சுமதி கதாபாத்திரத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். நல்ல வசூலை பெற்றுவரும் இப்படம், நல்ல விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
அந்த வகையில நடிகை மிருணாள் தாக்கூர், 'லக்கி பாஸ்கர்' படத்தை பார்த்து விமர்சனம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், 'லக்கிபாஸ்கர் மற்ற படங்களிலிருந்து தணித்து நிற்கும் புத்துணர்ச்சியூட்டும் திரைப்படம். அதில் உள்ள அனைத்து காட்சிகளும் அற்புதமாக இருந்தன. அனைத்தையும் விரும்பினேன்! துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். அவசியம் பார்க்கவும்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானபடம் 'சீதா ராமம்'. இதில், துல்கர் சல்மான் கதாநாயகனாகவும் மிருணாள் தாக்கூர் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.