சினிமா செய்திகள்
Mrunal Thakur lost the opportunity to work with Salman Khan due to his weight
சினிமா செய்திகள்

உடல் எடை காரணமாக சல்மான் கான் பட வாய்ப்பை இழந்த மிருணாள் தாக்கூர்

தினத்தந்தி
|
11 Jan 2025 6:09 AM IST

சீதா ராமம், ஹாய் நன்னா, பேமிலி ஸ்டார் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மிருணாள் தாக்கூர்.

மும்பை,

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாக்கூர். சீதா ராமம், ஹாய் நன்னா, பேமிலி ஸ்டார் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானார்.

இருந்தபோதிலும், சல்மான் கான் நடிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான சுல்தான் படத்தில் நடிக்க அவர் நிராகரிக்கப்பட்டிருக்கிறார். இப்படத்தில் சல்மான் கானுடன், அனுஷ்கா ஷர்மா நடித்திருந்தாலும், முதலில் கதாநாயகியாக நடிக்க மிருணாள் தாக்கூர்தான் பரிசீலிக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், மல்யுத்த வீராங்கனை கதாபாத்திரத்திற்கான உடல் எடை அவரிடம் அப்போது இல்லாத காரணத்தால் சல்மான் கானுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார். இதனை சல்மான் கானே முன்னதாக தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்