இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்
|இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் தமிழ் படங்கள் குறித்த ஒரு பார்வை.
ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் குறித்த தகவலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
'மழையில் நனைகிறேன்'
டி.சுரேஷ் குமார் இயக்கத்தில் அன்சன் பால் நடித்துள்ள திரைப்படம் 'மழையில் நனைகிறேன்'. இந்தப் படத்தை ராஜ்ஸ்ரீ வென்சர்ஸ் சார்பில் பி.ராஜேஷ் குமார் மற்றும் ஸ்ரீவித்யா ராஜேஷ் தயாரித்து இருக்கிறார்கள். இப்படத்தில் ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வருகிற 12-ந் தேதி ரஜினியின் பிறந்த நாளன்று வெளியாக உள்ளது.
'மிஸ் யூ'
சித்தார்த் நடிப்பில் என்.ராஜசேகர் இயக்கத்தில் ரொமாண்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள படம் 'மிஸ் யூ'. இப்படத்தில் கதாநாயகியாக கன்னட நடிகை ஆஷிகா ரங்கநாத் நடிக்கிறார். கருணாகரன், பால சரவணன், லொள்ளு சபா மாறன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 7 மைல்ஸ் பெர் செகண்ட் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த மாதமே ரிலீஸ் ஆக இருந்த நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது. அந்த வகையில் இப்படம் வருகிற 13-ந் தேதி வெளியாக உள்ளது.
'சூது கவ்வும் 2'
நலன் குமாரசாமி இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம் 'சூது கவ்வும்'. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படத்தின் வெற்றி தொடர்ந்து, தற்போது இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு 'சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்கியுள்ளார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி சிவா' நடித்துள்ளார். இவருடன் இணைந்து ராதாரவி, ரமேஷ் திலக், கருணாகரன், எம் எஸ் பாஸ்கர் ஆகிய பலரும் நடித்திருக்கின்றனர். இப்படம் வருகிற 13-ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.
'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'
பிரசாத் முருகன் இயக்கத்தில் பரத் கதாநாயகனா நடித்துள்ள திரைப்படம் 'ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்'. இப்படத்தில் சுஹைல், ராஜாஜி, அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் எதிர்பாராத விதமாக கிடைக்கும் துப்பாக்கியை வைத்து நான்கு கதாப்பாத்திரத்திற்குள் ஒரு ஹைப்பர் லிங்க் கதைக்களத்தோடு உருவாகியுள்ளது. இப்படம் வருகிற 13-ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.