பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு
|நடிகர் பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு 'தி ராஜா சாப்' படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவந்த பிரபாஸ், 'பாகுபலி' படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். சமீபத்தில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி ரூ.1,050 கோடிக்கும் மேல் கடந்து வசூல் செய்து சாதனை படைத்த 'கல்கி 2898 ஏ.டி' திரைப்படத்தை அடுத்து, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. தமன் இசையமைக்கும் இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளநிலையில், இப்படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
அதன்படி, இன்று நடிகர் பிரபாஸ் தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனை சிறப்பிக்கும் வகையில், 'தி ராஜா சாப்' படக்குழுவினர் படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டு நடிகர் பிரபாஸுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.